Monday, June 29, 2009
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பழமொழிகள்
காரைக்குடியில் உள்ள மைய மின்வேதியல் ஆய்வகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்சியில் ஈடுபட்ட நண்பனொருவன், I. I. T -Bombay யில் வாய்ப்பு கிடைத்தவுடன் இங்கே தாவினான். துரதிர்ஷ்டவசமாக, அவனுடைய நெறியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், I. I. T -Bombay யில் இருந்து நீக்கப்பட்டான். இந்த சம்பவம் நடந்த பொழுது, நண்பர்கள் பயன்படுத்திய பழமொழிகள் பற்றியதே இப்பதிவு. ஒருவன் சொன்னான், "அரசனை நம்பி புருசனை கைவிட்டதுக்கான" பலனை அனுபவிக்கிறான். விநாயகர் சிலைகள் அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் விநாயகரை சுற்றுவதாக நினைத்து அரச மரத்தை சுற்றினால், அம்மரத்தில் இருந்து வரக்கூடிய மூலிகை காற்று கர்ப்பப்பையில் உள்ள குறைகளை நீக்கும். அதனால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. அதே சமயம், குழந்தை பெற்றுக் கொள்ள அரசினை (அரச மரம்) நம்பினால் போதும், புருசனுடன் கூட வேண்டியதில்லை என்று நினைப்பது தவறு என்பதே இப்பழமொழியின் பொருள். "அரசினை நம்பி புருசனை கைவிட்டது போல" என்பதே சரி. இன்னொரு நண்பன் சொன்னான், இந்த நெறியாளரை நம்பி ஆராய்சியில் ஈடுபடுவது, "மண்குதிரையை நம்பி ஆத்துல இறங்குறதுக்குச் சமம்". மண்குதிரை என்பது ஒரு அசையாப்பொருள் அதை நம்பி தரையிலேயே பயணிக்க முடியாத போது, எப்படி ஆற்றில் இறங்க முடியும்? ஆற்றில் நீர் ஓடும் போது, மணல் அடித்துச் செல்லப்பட்டு, மணல் குன்றுகள் உண்டாகும். இதற்குப் பெயர் "மண் குதிர்". முழுவதுமாக ஆற்றை நீந்தி கடக்கும் ஆற்றல் இல்லாதவர்கள், சிறிது தூரம் நீந்தி, பின்னர் மண் குதிரில் நின்று விட்டு மீண்டும் நீந்தலாம் என திட்டமிடக்கூடும். மண் குதிரில் யாராவது ஏறினால், அது உடனே சரிந்து அதில் ஏறியவர் நீரில் அடித்துச் செல்லப்படுவர். எனவே "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது" என்றனர் நம் முன்னோர்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//இப்பதிவு//
இவ்விடுகை!
could u please disable word verification?
விளக்கம் நன்று நண்பா!
என்னங்க, இன்னும் தமிழ்மணம், தமிலிசு ஒன்னும் பதியலையா? ச்சும்மா பதிச்சு விடுங்க!!
//என்னங்க, இன்னும் தமிழ்மணம், தமிலிசு ஒன்னும் பதியலையா? ச்சும்மா பதிச்சு விடுங்க!!//
தமி்ழ்வெளியில வருது நண்பா, ஆனா தமிழ்மணத்துலயும், தமிழிஷ்லயும் இனைக்கிற வித்தை இன்னும் தெரியல. ஒரு இரண்டு நாளுல பழகிர்ரேங்க. ரொம்ப நன்றிங்க.
நல்லா சொன்னீங்க....
Post a Comment