டேய் தம்பி, விடியக்காலம் வந்து வடை மாவை கரண்டு போரதுக்கு முன்னாடி ஆட்டிப்புடு. காலைல 7 மணிக்கு அடிச்சு, சாங்காலம் 6 மணிக்கு தான் விடுவாங்கலாம்.
இது ஏப்ரல் மாதம் கமுதியில் நான் கேட்ட உரையாடல். நான் வாழும், அமெரிக்காவில், மின் தடை என்பது அபூர்வம். ஆனாலும், எதிர்கால மின்சாரத் தேவைகளை கருத்தில் கொண்டு தீவிர ஆராய்ச்சிகள் இங்கே நடைபெருகின்றன. ஜியோபேக்டர் எனும் நுண்ணுயிரி, நம் உடலில் இருந்து வெளியேரும் கழிவுகளை உட்கொண்டு மின்சாரத்தை அளிக்கக்கூடியது. இந்த ஆராய்ச்சியில் 1 ஆண்டு காலம் ஈடுபட்டேன். என் சிற்றறிவிர்க்கு எட்டிய வரையில், ஒரு சிறு மகிழ்ஊர்தியை இயக்க ஒரு சரக்குப்பெட்டகம் அளவு ஜியோபேக்டர் தேவை. அதே போல, இந்த நுண்ணுயிரி அதிகபட்சம் ஒரு வார காலம் உயிர் வாழும். இத்தனை குறைகள் இருந்தும், அமெரிக்க அரசாங்கமும், டொயோடா போன்ற முண்ணனி வாகன தயாரிப்பாளர்களும் இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்து வருகின்றனர். இந்த ஜியோபேக்டர், முதல் முதலில் பொடோமாக் ஆற்றில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. இதே நுண்ணுயிரி குடும்பத்தைச் சேர்ந்த வேரு சில நுண்ணுயிரிகள், ராமேஸ்வரம் கடற்பகுதியிலும் கிடைப்பதாக அறிகிறேன். தமிழக மக்களின் எதிர்கால தேவை கருதி, தமிழக முதல்வர், தமிழின தலைவர், முத்தமிழறிஞர், ஐயா டாக்டர் கலைஞர் அவர்கள், இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும், "சொக்கத்தங்கம்" அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதவோ, தந்தி அடிக்கவோ பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், டாக்டர் கலைஞர் அவர்களின் கனவில் தோன்றி அறிவுறுத்த வேண்டுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment