Monday, July 6, 2009

இல‌ங்கையில் த‌லையாட்டிய‌ ராமு!

ந‌ம்மூரு ப‌த்திரிக்கைக‌ள்ள‌, ந‌டுநில‌, இட‌நில, வ‌ல‌நில த‌வ‌றாத‌ தி ஹிந்து வோட‌ ஆசிரிய‌ர் ராம், டீ குடிக்க‌ இல‌ங்கைக்கு போயிட்டு, அப்பிடியே ராச‌ப‌க்சே கிட்ட‌ பேட்டி ஒன்னு எடுத்துருக்காரு. சும்மா சொல்ல‌ப்புடாது ம‌க‌ராச‌ன் ராமை, வ‌ள‌ச்சு வ‌ள‌ச்சு கேள்வி கேப்பாருன்னு பாத்தா சும்மா வ‌ள‌ஞ்சு வ‌ள‌ஞ்சு கேள்வி கேட்டுருக்காரு!‌ இங்க‌ உள்ள‌ முகாம்க‌ளோட‌ வ‌ச‌தி ப‌த்தி உங்க‌ளுக்கு திருப்தியா இருக்கா, எப்ப‌ அவுக‌ளை வீட்டுக்கு அனுப்புவிக‌ அப்பிடினு ஒரு கேள்விக் க‌ணையை தொடுக்குராரு ராமு! 60 வ‌ய‌சுக்கு மேல‌ உள்ள‌வுக‌ளை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டோம், அதுல‌ பாருங்க‌ ஒரு 72 வ‌ய‌சு ம‌னுச‌னை வெளில‌ விட, அவ‌ரு சிங‌ப்பூருக்கு த‌ப்பிச்சு போயிட்டாரு! அவ‌ர்கிட்ட‌ தான் புலிக‌ளோட‌ ப‌ண‌ லிஷ்ட் இருந்திருக்குனு, ராச‌ப‌க்சே போட்டாரே ஒரு போடு! முகாம்ல‌ அந்த‌ ம‌னுச‌ன் இருந்த‌ப்ப‌, அங்க‌ இருந்து அனுப்புன‌ப்பெல்லாம் அவ‌ர்கிட்ட‌ லிஷ்ட் இருந்த‌து உங்க‌ளுக்கு தெரியாதா? ஏன்யா முகாம்ல‌ குடிக்க‌, க‌ழுவ‌ த‌ண்ணிக்கே வ‌ரிசையில‌ நிக்கையில‌, வெளிய‌ வ‌ந்த‌ உட‌னே எப்பிடிய்யா சிங்க‌ப்பூருக்கு ப்லேட்ல‌ ப‌ற‌ந்தாருன்னெல்லாம் கேக்க‌ ந‌ம்ம‌ ராமு என்ன‌ கேண‌ப்ப‌ய‌லா? அறிவாளிப்பு, அறிவாளி! ராமு, உங்க‌ ஆத்தாட்ட‌ சொல்லி வெள்ளி செவ்வாய்க்கு சூட‌ம் சுத்திப்போட‌ சொல்லுங்க‌, யாரு க‌ண்ணும் ப‌ட்டுர‌ப்போகுது! வேலுப்பிள்ளையும் அவுக‌ ம‌னைவியும் முகாம்ல‌ இருக்காக‌லே, அவுக‌ வ‌ய‌சு என்ன‌ ப‌தின‌ஞ்சா? ந‌ம்ம‌ ராமு என்ன‌ லேசுப்ப‌ட்ட‌ ஆளா, அடுத்த‌ கேள்வியை எடுத்து உட்டாரு, அர‌சிய‌ல் தீர்வு ப‌ற்றி சொல்லுங்க‌? இன‌வெறி கூடாதுன்னு எல்ல‌ருகிட்ட‌யும் சொல்லிப்புட்டேன், இது ராச‌ப‌க்சே. இன்னைக்கு காலையில‌ ஒரு பேராசிரிய‌ர் போன் ப‌ண்ணி, ந‌ன்றி சொன்னாரு. ஏன்னு கேட்டா "அச‌த்திப்புட்டிக‌ ராசா, இன‌வெறி கூடாதுன்னு சொல்லி" அப்புடின்னாரு. ஒரு வாத்தியாரு உங்க‌கிட்ட‌ இவ்வ‌ள‌வு சுலுவா பேச‌முடியுதே, எங்கூரு ம‌ந்திரி பாலு, உங்க‌ அனும‌தி கேட்டு முக‌ர்ஜி காத்துகிட‌க்கிற‌தா சொன்னாரே, அது டூப்பா? இதுல‌ பாலு டுபாக்கூரா நீங்க‌ டுபாக்கூரான்னு ந‌ம்ம‌ ராமு கேக்க‌ ம‌ற‌ந்த‌தை, நாம‌ ஏன் கேக்க‌னும்?
புலிக‌ளை தோக்க‌டிக்க‌ முடியும்னு எப்ப‌ நினைச்சீங்க - ராமு. நாங்க‌ புலிக‌ள்ட‌ இருந்து எடுத்த‌ ஆயுத‌ங்க‌ளை வ‌ச்சு இல‌ங்கையைவும், தென்னிந்தியாவையும் தாக்கிருக்க‌ முடியும், ஆனாலும் நாங்க‌ ஜெயிச்சுட்டோம் - ராச‌ப‌க்சே! கேக்குற‌வ‌ன் கேணைய‌ன்னா, துப்பாக்கி புல்ல‌ட்டும், வ‌ண்டி புல்ல‌ட்டும் ஒன்னுதான்னு அடிச்சுவிட‌ வேண்டிய‌துதான‌! ச‌ண்டை ந‌ட‌க்கும் போதெல்லாம் அந்த‌ ஆயுத‌ங்க‌ளை வ‌ச்சு புலி பூசையா ப‌ண்ணிக்கிட்டு இருந்துச்சுனு ராமு கேட்டா, ப‌டிய‌ள‌க்குர‌ ம‌ஹ‌ராச‌ன் கோவிச்சுக்கிருவாரா இல்லையா? பேட்டி எடுக்க‌ ஆர‌ம்பிச்ச‌ப்புற‌ம், எடு எடுன்னு எடுக்காம‌ வ‌ர‌மாட்டாரு ந‌ம்ம‌ ராமு. உங்க‌ ப‌டையின‌ரோட‌ ஒழுக்க‌ம்? - ராமு. ரெ‌ண்டு மூணு புலி பொம்ப‌ளைக‌, ப‌டையின‌ர் கிட்ட‌ ச‌ர‌ண‌டஞ்சாக, அவுக‌ எல்லாம் ந‌ல்ல‌ ப‌டிய‌ இருக்காக‌ - ராச‌ப‌க்சே. செத்த‌ புலி பொம்ப‌ளைக‌ உடுப்பை அவுத்து நிர்வாண‌மாக்கின‌து‌, "ஹைட்டி"ல‌ சின்ன‌ புள்ளைக‌ளை க‌ற்ப‌ழிச்ச‌ இல‌ங்கை ப‌டையின‌ர் ப‌த்திய‌ நினைப்பு, இதை ப‌டிக்கிர‌ உங்க‌ளுக்கு வ‌ந்தா, அதுக்கு ராமு பொறுப்பு இல்ல‌. ஆசியாவோட‌ சிற‌ந்த‌ ஊட‌க‌விய‌ளால‌ர்னு இல‌ங்கையில‌ ப‌ல்லை இளிச்சு ப‌ட்ட‌ம் வாங்குன‌ ராமு, ந‌ம்ம‌ ல‌ச‌ந்த‌ கொலை ப‌த்தி கேக்காம‌ விடுவாரா, கேட்டார‌ப்பு கேட்டாரு.‌
ல‌ச‌ந்த‌ போன் ப‌ண்ண‌ப்ப‌ பூசையில‌ இருந்தேன், அதுனால‌ எங்க‌ ஆளுக‌ போனை என்கிட்ட‌ குடுக்க‌ளை, அது என‌க்கு ரொம்ப‌ வ‌ருத்த‌ம்னாரு ராச‌ப‌க்சே. கொலை ந‌ட‌ந்து ஆறு மாச‌ம் ஆகுது, ஒரு நட‌வ‌டிக்கையும் காணோமே அப்பிடின்னு கேள்வியெல்லாம் கேக்க‌ப்புடாது. புலிக‌ளை ப‌த்தி பேசுனா, ச‌கோத‌ர‌ த‌மிழ‌ர்க‌ளை கொன்ற‌ இய‌க்க‌ம்னு குட‌ல் தெரிய‌ வாயை பிள‌ந்து க‌த்துர‌து. அதையே ராச‌ப‌க்சே செஞ்சா ப‌ல்லு தெரிய‌ இளிக்கிர‌து. இது எல்லாத்தையும்விட‌, ராமு ஒரு ஈன‌ப்பிற‌வினு காட்டி குடுத்தது க‌டைசி கேள்வி. ராச‌ப‌க்சே சொன்ன‌து "ஒரு 19 வ‌ய‌சு பொண்ணு, 7 பிள்ளைக்கு அம்மா. புலிக‌ள் கிட்ட‌ இருந்து த‌ப்பிக்க‌ தொட‌ர்ந்து பிள்ளை பெத்துகிச்சு, அந்த‌ பிள்ளைக‌ளுக்கு அப்பா யாருன்னே அந்த‌ பொண்ணுக்கு தெரியாது. இதோட‌ உட்க‌ருத்து என்ன‌ங்கிற‌து இதை ப‌டிக்கிர‌ எல்லாருக்கும் புரியும்னு நினைக்கிறேன். இப்ப‌டி ஒரு விச‌ய‌த்தை பேசுர‌து ஒரு நாட்டோட‌ ச‌னாதிப‌தி, அதை கேட்டு மூடிக்கிட்டு இருக்குர‌ ராமு எல்லாம் ஒரு ம‌னுச‌ன்! 20000 அப்பாவிக‌ள் கொல்ல‌ப்ப‌ட்டதா உல‌கின் ப‌ல்வேறு ஊட‌க‌ங்க‌ள் சொன்ன‌து ப‌ற்றியோ, வெள்ளை வேனில் க‌ட‌த்த‌ப்ப‌டும் த‌மிழ‌ர்க‌ள் ப‌ற்றியோ, தொட‌ர்ந்த‌ ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ள் ப‌ற்றியோ ஒன்னுமே கேக்க‌லைங்கிர‌து இந்த‌ ஈன‌ப்பிற‌வி எடுத்த‌ பேட்டியோட‌ சிற‌ப்பு. "ஆட்டுக்கார‌ அல‌மேலு"ன்னு ஒரு ப‌ட‌த்துல‌ ஆடு ஒன்னு த‌லையை த‌லையை ஆட்டும், அதோட‌ பேரு ராமுனு நெனைவு!

Saturday, July 4, 2009

பாகுப‌ட்ட‌ நீதி!

ஊட‌க‌ங்க‌ள் பிளிருகின்ற‌ன‌, நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் கொந்த‌ளிக்கிறார்க‌ள், நீதிம‌ன்ற‌ம் ‌ கேள்வி கேட்கிற‌து, இதெல்ல‌ம் எத‌ற்காக‌? இந்திய‌ மாண‌வ‌ர்க‌ள் ஆஸ்திரேலியாவில் தாக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்காக‌. ச‌ந்தோச‌ம். ஐந்து ஆண்டுக‌ளுக்கு முன்பு அஷ்லான் ஷா ஹாக்கி கோப்பைக்கான‌ போட்டியில் இந்திய அணி ப‌ங்கேற்க‌ வேன்டாம் என‌ இந்திய அர‌சாங்க‌‌ம் அறிவுறுத்திய‌தால், அப்போட்டியை புற‌க்க‌ணித்த‌து இந்திய‌ அணி. இது எத‌ற்காக‌? இந்திய‌ த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ வ‌ல்லுன‌ர்க‌ள் ம‌லேசியாவில் அவ‌ம‌ரியாதை செய்ய‌ப்ப‌ட்ட‌தற்காக‌. ம‌கிழ்ச்சி. ஆனால், ஆண்டாண்டு கால‌மாக‌ இந்திய‌ர்க‌ள் வ‌ளைகுடா நாடுக‌ளிளும், ம‌லேசியா, சிங்க‌ப்பூர் போன்ற‌ "கோபால் ப‌ல்பொடி" நாடுக‌ளிளும் துன்புருத்த‌ப்ப‌டுவ‌து தொட‌ந்து கொண்டிருக்கிற‌து. ஊட‌க‌ங்க‌ள் பிளிர‌ வேண்டாம், கூவ‌வாது செய்ய‌லாமில்லையா? நாடாளும‌ன்ற‌ உருப்பின‌ர்க‌ள் கொந்த‌ளிக்க‌வேண்டாம், முன‌க‌வாவ‌து செய்ய‌லாமில்லையா? ஜ‌ன‌நாய‌க‌த்தின் மூன்றாவ‌து நான்காவ‌து தூண்க‌ள் ஏன் எல்லா சூழ்நிலைக‌ளிளும் ஒரே மாதிரி செய‌ல்ப‌டுவ‌து இல்லை? ம‌லேசியாவில் பாதிக்க‌ப்ப‌டுவ‌து ப‌டித்த‌ வ‌ச‌தி ப‌டைத்த‌ தொழில்நுட்ப‌ வ‌ல்லுன‌ர்க‌ள் என்றால் விரைந்து செய‌ல்ப‌டும் இந்தியா அர‌சு, அதே தேச‌த்தில் பாதிக்க‌ப்ப‌டும் ஏழை தொழிலாள‌ர்க‌ள் ப‌ற்றிக் க‌வ‌லைப் ப‌டுவ‌தே இல்லை. சில‌ ஆண்டுக‌ளுக்கு முன் அமெரிக்காவின் விர்ஜினியா ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்தில், ஒரு கொரிய‌ மாண‌வ‌ன் க‌ண்மூடித்த‌ன‌மாக‌ சுட்ட‌தில் இந்திய வ‌ம்சாவ‌ளி பேராசிரிய‌ர் ஒருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்டார். விரைந்து செய‌ல்ப‌ட்ட‌ இந்திய‌ அர‌சு, த‌மிழ‌க‌த்தில் இருந்த‌ அவ‌ர‌து உற‌வின‌ர்க‌ளுக்கு பாஸ்போர்ட், விசா பெற்று அவ‌ர்க‌ள் அப்பேராசிரிய‌ரின் இறுதிச் ச‌ட‌ங்கிள் க‌ல‌ந்து கொள்ள‌ ஆகும் ப‌ய‌ண‌ச்செலவுக‌ளையும் ஏற்றுக்கொண்ட‌து. அதே கால‌க‌ட்ட‌த்தில், இத்தாலியில் ஒரு உண‌வ‌க‌த்தில் வேலை செய்து கொண்டிருந்த‌ ஊழிய‌ர் ம‌ர‌ண‌ம் அடைந்துவிட்டார். அவ‌ர‌து உட‌லை இந்தியா கொண்டுவ‌ர‌ நீண்ட‌ போராட்ட‌ம் ந‌ட‌த்தி, நீதிம‌ன்ற‌த்தை அனுகி, த‌ன் க‌ண‌வ‌ரின் உட‌லை இந்தியா கொண்டு வ‌ர‌ அனும‌தி பெற்றார் அவ‌ர‌து ம‌னைவி. இத்தாலியில் இருந்து உட‌லை இந்தியா கொண்டுவ‌ர‌ தேவையான‌ ஆவ‌ண‌ங்க‌ளை இந்திய அர‌சு த‌யார் செய்து த‌ரும், ஆனால் உட‌லை கொண்டு வ‌ருவ‌த‌ற்கான‌ விமான‌ச்செல‌வுக‌ளை அந்த‌ ஏழைப்பெண் ஏற்றுக்கொள்ள‌வேண்டும் என்ற‌து இந்திய‌ அர‌சு! ஏன் இந்த‌ பார‌ப‌ட்ச‌ம்? இன்னும் என் தேச‌த்தில், ஏழைக்கொரு நீதி, ப‌ண‌க்கார‌னுக்கொரு நீதியா? இந்திய‌ அர‌ச‌மைப்பு ச‌ட்ட‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ "ச‌ட்ட‌த்தின் முன் அனைவ‌ரும் ச‌ம‌ம்" என்ப‌து வெற்று வார்த்தைக‌ள் தானோ!

Wednesday, July 1, 2009

த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் - II

த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு இடுகைக்கான‌ த‌லைப்பு "வ‌க்க‌த்த‌வ‌ன் வாத்தியான், போக்க‌த்த‌வ‌ன் போலிசு" என்று இருந்த‌து. இந்த‌ வாச‌க‌ம் த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்ப‌தை விள‌க்குவ‌தே இவ்விடுகையின் நோக்க‌ம் (ந‌‌ன்றி ந‌ண்ப‌ர் ப‌ழ‌மைபேசி அவ‌ர்க‌ளே, இடுகைக்கும் ப‌திவிற்கும் உள்ள‌ வித்தியாச‌ம் என்ன‌?) இச்ச‌மூக‌த்தின் ந‌ல‌ன் பேணுவ‌தில் ஆசிரிய‌ர் ம‌ற்றும் காவ‌ல‌ர்க‌ளின் ப‌ங்கு முக்கிய‌மான‌து. முக்கிய‌மான‌ ஒரு ப‌ணியை மேற்கொள்ப‌வ‌ர்க‌ள் எப்ப‌டி வ‌க்க‌த்த‌வ‌னாக‌வும், போக்க‌த்த‌வ‌னாக‌வும் இருக்க‌ முடியும்? ஒரு ஆசிரிய‌ர் மாண‌வ‌ர்க‌ளுக்கு வாக்கை க‌ற்றுக்கொடுக்கிறார், என‌வே வாக்கை க‌ற்ற‌வ‌ன் வாத்தியார் என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌து.
காவ‌ல‌ர்க‌ள் குற்ற‌வாளிக‌ளை தேடி க‌ண்டுபிடிக்கும் ப‌ணி செய்ப‌வ‌ர்க‌ள், என‌வே குற்ற‌வாளி எங்கே போகிறான் என்ப‌தை காவ‌ல‌ர் அறிந்து இருக்க‌ வேண்டும். குற்றவாளியின் போக்கை க‌ற்ற‌வ‌ன் போலிசு என்ப‌தை, போக்கை க‌ற்றவ‌ன் போலிசு என்று சொன்னார்க‌ள். "வாக்கை க‌ற்ற‌வ‌ன் வாத்தியார், போக்கை க‌ற்ற‌வ‌ன் போலிசு" என்ப‌தே ச‌ரி. ம‌ற்றுமொரு த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மொழி "ஆயிர‌ம் பேரை கொன்ற‌வ‌ன் அரை வைத்திய‌ன்". ஒரு வைத்தியன் ஆயிர‌ம் பேரை கொன்றால், அவ‌ன் வைதிய‌னே அல்ல‌, கொலைகார‌ன்! முற்கால‌த்தில், இந்திய‌ ம‌ருத்துவ‌ம் மூலிகைக‌ளை அடிப்ப‌டையாக‌ கொண்ட‌து. ஒரு ம‌ருத்துவ‌ன் மூலிகைக‌ளின் ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள், அவை கிடைக்கும் இட‌ம், ஒரு மூலிகை குண‌ப்ப‌டுத்தும் நோய்க‌ள் ப‌ற்றி அறிந்து இருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். என‌வே ஆயிர‌ம் வேர்க‌ளையாவ‌து க‌ற்ற‌வ‌னே அரை வைத்திய‌ன், முழு வைத்திய‌ன் ஆக‌ மேலும் ப‌ல‌ வேர்க‌ளை க‌ற்க‌ வேண்டும் என்ப‌தே அத‌ன் பொருள். என‌வே, "ஆயிர‌ம் வேரை கொன்ற‌வ‌ன் அரை வைத்திய‌ன் என்ப‌தே ச‌ரி" ந‌ம் தாய் மொழியாம் த‌மிழ் மொழியில் அறிவார்ந்த‌ இடுகைக‌ளை அளித்து‌ கொண்டிருக்கும் ந‌ண‌ப‌ர் ப‌ழ‌மைபேசிக்கு ந‌ன்றியும், வாழ்த்துக்க‌ளும்.