Saturday, July 4, 2009
பாகுபட்ட நீதி!
ஊடகங்கள் பிளிருகின்றன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொந்தளிக்கிறார்கள், நீதிமன்றம் கேள்வி கேட்கிறது, இதெல்லம் எதற்காக? இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்டதற்காக. சந்தோசம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அஷ்லான் ஷா ஹாக்கி கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி பங்கேற்க வேன்டாம் என இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியதால், அப்போட்டியை புறக்கணித்தது இந்திய அணி. இது எதற்காக? இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் மலேசியாவில் அவமரியாதை செய்யப்பட்டதற்காக. மகிழ்ச்சி. ஆனால், ஆண்டாண்டு காலமாக இந்தியர்கள் வளைகுடா நாடுகளிளும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற "கோபால் பல்பொடி" நாடுகளிளும் துன்புருத்தப்படுவது தொடந்து கொண்டிருக்கிறது. ஊடகங்கள் பிளிர வேண்டாம், கூவவாது செய்யலாமில்லையா? நாடாளுமன்ற உருப்பினர்கள் கொந்தளிக்கவேண்டாம், முனகவாவது செய்யலாமில்லையா? ஜனநாயகத்தின் மூன்றாவது நான்காவது தூண்கள் ஏன் எல்லா சூழ்நிலைகளிளும் ஒரே மாதிரி செயல்படுவது இல்லை? மலேசியாவில் பாதிக்கப்படுவது படித்த வசதி படைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் என்றால் விரைந்து செயல்படும் இந்தியா அரசு, அதே தேசத்தில் பாதிக்கப்படும் ஏழை தொழிலாளர்கள் பற்றிக் கவலைப் படுவதே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலை கழகத்தில், ஒரு கொரிய மாணவன் கண்மூடித்தனமாக சுட்டதில் இந்திய வம்சாவளி பேராசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். விரைந்து செயல்பட்ட இந்திய அரசு, தமிழகத்தில் இருந்த அவரது உறவினர்களுக்கு பாஸ்போர்ட், விசா பெற்று அவர்கள் அப்பேராசிரியரின் இறுதிச் சடங்கிள் கலந்து கொள்ள ஆகும் பயணச்செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. அதே காலகட்டத்தில், இத்தாலியில் ஒரு உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் மரணம் அடைந்துவிட்டார். அவரது உடலை இந்தியா கொண்டுவர நீண்ட போராட்டம் நடத்தி, நீதிமன்றத்தை அனுகி, தன் கணவரின் உடலை இந்தியா கொண்டு வர அனுமதி பெற்றார் அவரது மனைவி. இத்தாலியில் இருந்து உடலை இந்தியா கொண்டுவர தேவையான ஆவணங்களை இந்திய அரசு தயார் செய்து தரும், ஆனால் உடலை கொண்டு வருவதற்கான விமானச்செலவுகளை அந்த ஏழைப்பெண் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றது இந்திய அரசு! ஏன் இந்த பாரபட்சம்? இன்னும் என் தேசத்தில், ஏழைக்கொரு நீதி, பணக்காரனுக்கொரு நீதியா? இந்திய அரசமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்ட "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்பது வெற்று வார்த்தைகள் தானோ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment