அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் கச்சத்தீவை மீட்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றத் தயார், என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இலங்கையில் போரை நிறுத்த வேண்டி, அனைத்து கட்சிகளும் ஆதரித்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அந்த தீர்மானத்திற்கு கிடைத்த மரியாதை என்ன என்பதை தமிழினம் அறியும். அதற்குப் பின்னால், தி. மு. க வும் அதன் தோழமை கட்சிகளும் இறுதி வேண்டுகோள் விடுத்து நிறைவேற்றிய தீர்மானமும் மத்திய அரசினால் குப்பைக் கூடைக்கு அனுப்பப் பட்டது, நாம் அறிந்ததே! தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில், ஒரு கட்சி தீர்மானமோ, அனைத்துக் கட்சி தீர்மானமோ எந்த பலனும் தரப்போவதில்லை என்பது தெரிந்தும் எதற்குத் தீர்மானமும், அதை அடுத்த அவமானமும்? ஆனால், எதிர்காலத்தில் கூட்டணி மாறும் போது, "தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினை ஆன கச்சத்தீவை மீட்க வேண்டி கழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை மதிக்காத காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை" என்று சொல்ல இத்தீர்மானம் உதவக்கூடும். ரூபாய் 500 க்கு ஓட்டுப் போட தயாராக இருக்கும் மக்கள் இருக்கும் வரை, தீர்மானங்களுக்கும், அவமானங்களுக்கும் அவசியமில்லை என்பதே நிதர்சனம்!
இந்த பதிவையும் படிக்க வேண்டுகிறேன்
http://yaazhumvaazhum.blogspot.com/2009/06/blog-post_2911.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment