அ.தி.மு.க வின் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் முத்துமணித் தேவர் எனது தந்தையை அழைத்து, இந்த கடிதத்தை எழுதியது யார் என தெரிகிறதா என்று கேட்டு 2 மாதங்களுக்கு பின்னாள் முத்துமணித் தேவர் கொலை செய்யப்பட்டார். மொட்டை கடிதத்தில் இருந்தது அவர் கொலை செய்யபட போவதற்கான முன்னறிவிப்பே. கொலையை கற்பனை செய்ய நினைப்பவர்கள், சீவலப்பேரி பாண்டி படத்தில், இன்றைய சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு நெப்போலியன் அவர்கள் உதவியுடன் ஊர் தலைவர் கொல்லப்படுவதை பார்க்க வேண்டி இரைஞ்சுகிரேன். கமுதியில் இருந்து அருப்புகோட்டை செல்லும் வழியில் ஒரு பிணம் கிடப்பதாக சொல்லி ஊர்மக்களோடு நானும் ஒடி சென்று பார்தேன். நேதாஜி என்பவரின் இடுப்புக்கு மேல் பாகம் ஒரு பகுதியாகவும், கீழ் பாகம் ஒரு பகுதியாகவும் கிடந்தது. பின்னாளில் பம்பை கோவிந்தன் எனபவர், குரங்கு முத்தையா என்பவருடன் இந்த கொலையை செய்ததாக கைது செய்யப்பட்டார். குரங்கு முத்தையா என்பவர் மதுரையை சேர்ந்த தொழில் முறை கொலைகாரர். இவரை முரடன் முத்தையா எனப்பட்ட போலிஸ் எஸ். பி யுடன் குழப்ப வேண்டாம் என இது வரை இந்த பதிவை படிக்கும் அன்பு நெஞ்சங்களை கேட்டுக்கொள்கிறேன்! பம்பை கோவிந்தனின் மூன்று தனித்தன்மைகளை இங்கே குறிப்பிட வேண்டும். 1. இவருடைய முடி அலஙகாரம் கொலம்பிய கால்பந்தாட்ட வீரர் வால்டராமாவை ஒத்தது. வால்டராமா மிட்ஃபீல்டர் ஆக ஆடிய பொழுது, ஃபுல் பேக் விளையாடிய எஸ்கோபர், பின்னாளில் கொலம்பியாவில் சுட்டு கொல்லப்பட்டார். காரணம்: எஸ்கோபர் தன் அணி கோல் கீப்பருக்கு உதைத்த பந்து சேம் சைடு கோல் ஆக மாறியதே!
2. எங்களூர் பேருந்துகளிலேயே டேப் ரெக்கார்டர் இல்லாத காலத்தில் இவருடைய என்ஃபீல்டு புல்லட்டில் டேப் ரெக்கார்டர் இருந்தது (யாழ்பாணத்து பதிவர் அண்ணன் புல்லட் பாண்டி இந்த அளவுக்கு தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்தவரா என்பது எனக்கு தெரியாது!). 3. இவர் அணிந்து இருந்த கணையாழியின் நீளம் 4 இன்ச், அகலம் 4 இன்ச். இந்த மோதிரம் தொடர்பு பட்ட பின் நவீனத்துவ பகடி ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். நானும், என் தந்தையும் அன்றைய இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் மேலாளர் கருத்தப்பாண்டியன் உடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது உள்ளே வந்த பம்பை கோவிந்தனிடம், கருத்தப்பாண்டியன் இப்படி கேட்டார் "அய்த்தான், வெலிக்கிப் போயிட்டு எப்படி கழுவுகிறீர்கள்! (இது ஒரு பின் நவீனத்துவ பகடி என்று மனுஷனுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை!). இது தவிர எத்துனையோ கொலைகள். பிற்காலத்தில் I.I.T-Bombay, Chemistry Department டில் ஆராய்ச்சி பணியில் இருந்த பொழுது நடந்த கொலை வித்தியாசமானது. கமுதி மசூதி முன் உள்ள டீ கடையில் அதிகாலை 5 மணி.
சில மனிதர்கள்: யேய், கடையை மூடு.
கடை மனிதர்: விடியக்காலம் அபசகுனமா பேசாம ஓடிப்போங்கடா.
ஒருவன் தன் கையில் இருந்த பையை திறந்து காண்பித்த உடன் கடையை மூடி விட்டு ஒடி விடுகிறான் கடைக்காரன்.
அந்த பையை திறந்து, மசூதி முன் உள்ள தெருவில் வைத்து விட்டு, நன்கு விடியும் வரை அந்த கும்பல் அங்கேயே இருந்து விட்டு சென்றது. காரணம், மக்கள் பார்க்கும் முன், ராமரின் தலையை நாய் கடித்து விட்டால்! இந்த கொலைகளை செய்தவர்களுக்கும் இதே கதி தான்.
இது வன்முறையின் தோல்வி என நம்ப நான்ன்ன்ன்ன்ன்ன்ன் ரெடி, நீங்கககககககக ரெடியா!
ஆனால், வன்முறையை மிக அருகில் இருந்து அனுபவித்த, அதை வெறுக்க கூடிய என்னால் ஈழ தமிழர்கள் வன்முறையை தங்கள் இன விடுதலைக்கான ஆயுதமாக தெரிவு செய்ததை என்னால் வெறுக்க முடியவில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment