கனவை, கனவாகவே வைத்திருப்பவனின்
கனவு இருந்தால் என்ன, கலைந்தால் என்ன
என்ற வரிகளை பிரபாகரன் கேட்டு இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் 30 ஆண்டு காலம் தன் கனவான ஈழ, இன விடுதலைக்காக போராடிய மாவீரன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பது தெரியாத இன்றைய நிலையில், நமக்கொரு தலைவனை தெரிவு செய்ய வேண்டிய அவசர, அவசிய கடமை இருக்கிறது. 20000 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட பொழுது, தன் உடலின் ஒன்பது துவாரங்களையும் மூடி கொண்டிருந்த "கள்ள கடவு சீட்டு" கருணாவோ, டக்ளசோ, ஆனந்த சங்கரியோ, பிள்ளையானோ, தொண்டைமானோ, சித்தார்தனோ தமிழ் இன விடுதலையை முன்னெடுத்து செல்ல தகுதி அற்றவர்கள். செ. பத்மனாதனுக்கும் இந்த நபர்களுக்கும் இன்றைய சூழழில் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. தலைமறைவாக வாழும் மனிதரை தலைவராக தெரிவு செய்வது, மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றதே! காலத்தின் அருமை கருதி உடனடியாக ஒரு தலைவன் தெரிவு செய்ய படுவது அவசியம். 1984 இல், ஜெயவர்தனே கொடும்பாவி எரிக்க அண்ணண் வழுதி எழிற்கோ தலைமையில், எனது 8 வது வயதில் கமுதி நகரில் ஊர்வலம் சென்றது முதல் இன்று வரை ஈழ போராட்டத்தை கவனித்து வருபவன் என்ற முறையில் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன். இன்றைய அவசியம், ஒரு உலகறிந்த, தன்னலம் அற்ற தலைமை. முக்கண் முதல்வனே ஆனாலும், குற்றம் குற்றமே என்ற கீரன் ஒரு புலவன். மாவீரன் நெப்போலியன் அளித்த பாராட்டு பத்திரத்தையே கிழித்தெரிந்த பித்தோவான் ஒரு இசை கலைஞன். தான் நினைத்ததை நெஞ்சுரத்துடன் கடவுளுக்கும், மன்னனுக்கும் அஞ்சாமல் அறிவித்த மாபெரும் மனிதர்கள் இவர்கள். இவ்விருவராள் சமுதாய மாற்றம் நிகழவில்லை. ஆனால், தன் இன நலனையே குறிகோள் ஆக கொண்டு இசை வேள்வி நடத்தும் மாதங்கி அருள்பிரகாசம் (M. I. A) என் அறிவுக்கு எட்டிய வரையில் ஒரு சிறந்த தலைவர் ஆக இருப்பார் என்பது எனது கருத்து. உலக தமிழினம் இவர் பின் அணி வகுப்பது இன்றைய சூழழில் ஒரு தெளிந்த தெரிவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment