இந்திய அரசின் கூடுதல் செயலாளராக இருந்த, விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர் பி. இராமன், ஈழத்தமிழர்கள் மற்றும் பிரபாகரன் பற்றி இப்படி எழுதினார் "In my younger days, the Jaffna Tamils had a reputation for being meek and mild. We used to make fun of them by saying that if a policeman or a soldier pointed a gun at them they would tie their lungi above the knees and run. It is remarkable how Prabakaran made them shed their meek demeanour and stand up and fight for their rights. They fought ferociously because they felt degraded and humiliated by the Sinhalese majority after the British left Ceylon in 1948"
1980ல் தொடங்கப்பட்டு, 1984ல் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியை (பா. ஜ. க), 14 ஆண்டுகளில் அரசமைக்கும் சக்தியாக மாற்றிய வாஜ்பாயி மற்றும் அத்வானியின் திறமை வியக்கத்தக்கதே. இந்திய விடுதலைக்கு முன்பே தொடங்கப்பட்ட கம்யுனிஸ்ட் கட்சியும், விடுதலைக்குப் பின்னால் தொடங்கப்பட்ட பல்வேறு கட்சிகளும் சில மாநிலங்களில் செயல்படும் கட்சிகளாக சுருங்கிப் போனது, நாம் அறிந்ததே. மொழியால், மதத்தால், கலாச்சாரத்தால், பழக்க வழக்கங்களால் வேறுபட்டு பரந்து விரிந்த பாரத தேசத்தில், ஒரு இயக்கத்தை மிகக்குறுகிய காலத்தில் ஆட்சி செய்யத் தகுதியான கட்சியாக வார்த்தது, ஒரு சாதனையே. 2009, மே மாதத்தின் மத்திய பகுதியில் பா. ஜ. க வும், விடுதலைப் புலிகளும் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தனர். எதிர்காலத்தை திட்டமிட, சுயபரிசோதனை அவசியம், ஆனால் இவ்விரு இயக்கங்களும் செய்யும் சுயபரிசோதனை, பிரச்சினைகளை எதிர்கொள்கிற விதம், அதில் இவர்களுக்குள்ள ஒற்றுமை, எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. "தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்" என்று ஒரு வாசகம் உண்டு, அது போல, தோல்விக்கான காரணங்களை இவ்விரு இயக்கங்களின் உருப்பினர்கள், திடீர் நிபுணர்களாகி ஊடகங்களில் அலசோ அலசு என்று அலசித்தள்ளுகிறார்கள். Defeat should never be a source of discouragement but rather a fresh stimulus என்று யாரேனும் இவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
முதலாவதாக பா. ஜ. க:
தேர்தல் அரசியலில் வெற்றியும், தோல்வியும் தவிர்க்க முடியாதது. கானகத்தில் இருந்த புத்த மகானிடம் சென்ற ஒரு தாய், பாம்பு தீண்டி மரணித்த தன் மகனை உயிர்ப்பிக்கும் படி வேண்டினாள். மரணம் சம்பவிக்காத வீட்டில் இருந்து கால் படி கடுகு வாங்கி வா தாயே, உன் மகனை உயிர்ப்பித்து தருகிறேன் என்றார் மகான். வெருங்கையோடு திரும்பி வந்த தாயிடம், பிறந்த அனைவரும் இறப்பது உலக நியதி என்பதை எடுத்துச் சொன்னார் புத்தபிரான். பா. ஜ. க வினரே, தோல்வியே காணாத அரசியல் கட்சியொன்றின் தலைவரிடம் ஒரு குவளை தேநீர் வாங்கி பருகிவிட்டு, yazhumvaazhum@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அடுத்த நாளே பா. ஜ. க மத்தியில் அரசாள ஏற்பாடு செய்கிறேன்!? பா. ஜ. க தொண்டர்களே, பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் விந்திய மலைக்கு வடக்கே மட்டும் இருந்த கட்சியை, இன்று பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் கிளை பரப்பி நிற்கும் கட்சியாக மாற்றிய உங்கள் கட்சித் தலைவர்களை நம்புங்கள். 1999ல், 112 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சித் தலைமையின் மீது நம்பிக்கை வைத்த இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்களால், இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியிடம் பாடம் படியுங்கள்! பா. ஜ. க வின் தலைவர்களே, ஊடகத் துறையில் உங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்குங்கள். ஊடகத் துறையினர் உங்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட, என்ன செய்ய வேண்டும் என்பதை, சென்னையில் இலங்கைக்கான துணை தூதராக பணியாற்றிய அம்சாவிடம் கேளுங்கள்! வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என்ற அத்வானியின் பேச்சைவிட, மின்வெட்டு இல்லாத மாநிலம், தொழில் துறை வளர்ச்சி, உடல் நலன் பேணலுக்கான திட்டங்கள், மகப்பேறு மருத்துவத்திற்கான அறிய திட்டங்கள் பற்றிய மோடியின் பேச்சை விட, வருண் காந்தியின் முஸ்லிம் விரோத பேச்சிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்களுக்கு, உங்கள் தோல்வியில் முக்கிய பங்கு உண்டு. நீங்கள் சொல்ல விரும்பும் செய்தியை, மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகத்துறையில் உங்களுக்கு நண்பர்கள் அவசியம்.
இரண்டாவதாக விடுதலைப் புலிகள்:
முப்பது ஆண்டு கால அஹிம்சை போராட்டத்தின் தோல்விக்குப் பின், சிறு ஆயுதக்குழுவாக பத்தோடு பதினொன்றாக தொடங்கி, ஒரு தேசத்தின் 17000 சதுர கிலோமீட்டர் பரப்பை பிடித்து ஒரு இணை அரசாங்கத்தை நடத்திய, உங்களுடைய தற்போதைய செயல்பாடுகள் ஒருவித ஆற்றாமையை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. புலிகள் முன்னெடுத்த ஈழ விடுதலை போருக்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கம் முன்னெடுத்த பாலஸ்தீன விடுதலை போருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. உங்களைப் போலவே, பாலஸ்த்தீன விடுதலை இயக்கமும் பல தாக்குதல்களை இஸ்ரேலில் நடத்திய போதும், அதன் தலைவரான யாசர் அராபத்துக்கு உலக அளவில் ஒரு அறிமுகமும், மதிப்பும் இருந்தது உண்மை. துரதிர்ஷ்ட வசமாக, சர்வதேச காவல் துறையின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்த பிரபாகரனால், யாசர் அராபத்தின் நிலையை அடைய முடியாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாத இன்றைய நிலையிலும், பிரபாகரன் பற்றியே பேசிக் கொண்டு இருப்பது அறிவுடமை அல்ல. எங்கிருக்கிறார், எப்படி இருப்பார் என்பதே தெரியாத பத்மனாதன் சொல்லை நம்பி அவர் பின்னால் அணிவகுப்போம் என்ற உங்கள் அறிக்கைப் படி செயல்படுவது மீண்டும் ஒரு வீழ்ச்சியின் தொடக்கமாகவே இருக்கும். இன்றைய சூழலில், வெளிப்படையாக செயல்படக் கூடிய உலகின் பல்வேறு தேசங்களிலும் அறியப்பட்ட தலைமையை தேர்ந்தெடுங்கள். தலைமறைவாக இருப்பவர்கள் தலைமறைவாகவே இருங்கள், அறிக்கை விடுவதை நிறுத்துங்கள். இவை அனைத்தையும் விட, என் தேசத்திடம் கையேந்துவதை நிறுத்துங்கள். என்றைக்கு, ஆயிரக்கணக்கில் மனிதர்கள் மரணித்ததைப் பார்த்த பின்னும், அது பற்றிய உணர்ச்சியே இன்றி வாக்களித்தோமோ, அன்றே நாங்களும் மாண்டுவிட்டோம் என்பதே உண்மை.
இப்பதிவுடன் தொடர்புடைய என்னுடைய மற்றொரு பதிவை இந்த சுட்டியில் படிக்க வேண்டுகிறேன்
http://yaazhumvaazhum.blogspot.com/2009/06/blog-post_08.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment