Tuesday, June 16, 2009
குடல் சுத்தி ஆடுதல்
நம்ம குண்டாத்துல, வருசத்துள ஒரு வாரம் தண்ணி ஒடுனா அது ஒரு அதிசயம். நம்ம சூப்பர் ஸ்டார் ரசினி குடுக்குரதா சொன்ன 1 கோடி ரூவா கூட நம்ம கவர்மண்டு கொஞ்சம் பணம் போட்டு, நம்ம ஊருகல்ல ஒடுர ஆத்தை பூராவும் நம்ம குண்டாத்தோட இணைக்கிரதா திட்டமாம். இந்த ஆத்துக்கரையில இருக்க முனியப்பசாமி கோவில், மாசிக்களரி ரொம்ப பேமஸ். ராத்திரி 8 மணிக்கு, ஒரு கிடாயை பிடிச்சுட்டு வந்து, அதோட உத்தரவை வாங்கி, அதை வெட்டுரது ஒரு சம்பிரதாயம். நம்ம ஆளுக, எம்புட்டு பெரிய திருடங்கனு, ஆடு கிட்ட உத்தரவு வாங்குரதை பாத்தா தெரியும். நல்ல பச்சத்தண்ணில, மஞசளை கரைச்சு, அதுல கொஞ்சம் வேப்பிலை பிச்சு போட்டு ஒரு அண்டாவில வச்சு இருப்பாங்க. இதை தூக்கி இவங்க ஏற்கனவே முடிவு பண்ணி வச்சு இருக்க கிடாய் மேல ஊத்துவாங்க. பாவம் அது என்ன செய்யும், தண்ணியை தள்ளி விட, தலையை ஆட்டுமா இல்லையா, உடனே ஒரு பெருசு, ஆடு ஒரு உத்தரவு குடுத்துருச்சு. நம்மூரு வழக்கப்படி, 3 உத்தரவு வாங்கனும்பே. தண்ணியை இன்னம் நல்லா ஊத்துங்க! இப்படி மூணு தடவை தலையை ஆட்டுன உடனே, கிடாயோட கழுத்தை அறுத்து, காலை வெட்டி, காலை ஆட்டோட வாயில வச்சு, மண்டையை சாமி சிலை முன்னக்க வச்சுருவங்க. சாமிக்கு படயளாம். இதோட விடாம, ஆட்டோட கொடலை உருவி அதை தண்ணி வச்சு அலசி, கொடலோட ஒரு பக்கம் ஒரு குழாவை சொருகி ஊதுவாங்க. இதை சின்ன வயசுல பார்த்தப்ப, வெள்ளை கலர், நீள சைக்கள் டீப் மாரி இருந்துச்சு. ராத்திரி, 11 மணி போல, முனியப்ப சாமி பாரி வேட்டைக்கு கிளம்பும். எங்க பெரியப்பா அந்த கொடலை அவர் உடம்புல சுத்திகிட்டு, ஒரு பெரிய அருவா ஒண்ணையும் தூக்கிகிட்டு, சாமி முன்னாடி நடக்க, இவருக்கு முன்னாடி ஒரு கரகாட்ட குருப்பு ஒன்னு கரகமே இல்லாம ஆடிக்கிட்டு போகும். இந்த கரகாட்ட பொம்பளைக போட்டு இருக்க உடுப்பு இருக்கே, ஆத்தீ அதை இங்க சொல்ல முடியாது. எங்க பெரியப்பு வேர ஏய், ஏய்னு கத்திகிட்டே வருவாரு. இவரு சாமி வந்து கத்துனாரா, இல்லை ஆடுர பொம்பளைகளை பாத்து கத்துனாரான்னு, இன்னைக்கு வரை தெரியலை. அதை தெரிஞ்சுக்கவும் முடியாது. ஒரு 15 வருசத்துக்கு முன்னாடி, நட்ட நடு ராத்திரில, அவுக ஊருக்கு போன மனுசன், தண்ணியில்லாத கிணத்துல தடுக்கி விழுந்து செத்துப்போனாரு. கிடாய் கொடலை சுத்தி ஆடுன மனுசனுக்கே இந்த, தன்டனை குடுத்த, ஏஞ்சாமி, ஊர்ப்பட்ட சனத்து கொடலை உருவி மாலை போட்டு ஆடுன, ராசபக்சேக்கு என்ன தண்டனை குடுப்ப, எப்ப குடுப்ப?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment