Wednesday, July 1, 2009

த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் - II

த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு இடுகைக்கான‌ த‌லைப்பு "வ‌க்க‌த்த‌வ‌ன் வாத்தியான், போக்க‌த்த‌வ‌ன் போலிசு" என்று இருந்த‌து. இந்த‌ வாச‌க‌ம் த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்ப‌தை விள‌க்குவ‌தே இவ்விடுகையின் நோக்க‌ம் (ந‌‌ன்றி ந‌ண்ப‌ர் ப‌ழ‌மைபேசி அவ‌ர்க‌ளே, இடுகைக்கும் ப‌திவிற்கும் உள்ள‌ வித்தியாச‌ம் என்ன‌?) இச்ச‌மூக‌த்தின் ந‌ல‌ன் பேணுவ‌தில் ஆசிரிய‌ர் ம‌ற்றும் காவ‌ல‌ர்க‌ளின் ப‌ங்கு முக்கிய‌மான‌து. முக்கிய‌மான‌ ஒரு ப‌ணியை மேற்கொள்ப‌வ‌ர்க‌ள் எப்ப‌டி வ‌க்க‌த்த‌வ‌னாக‌வும், போக்க‌த்த‌வ‌னாக‌வும் இருக்க‌ முடியும்? ஒரு ஆசிரிய‌ர் மாண‌வ‌ர்க‌ளுக்கு வாக்கை க‌ற்றுக்கொடுக்கிறார், என‌வே வாக்கை க‌ற்ற‌வ‌ன் வாத்தியார் என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌து.
காவ‌ல‌ர்க‌ள் குற்ற‌வாளிக‌ளை தேடி க‌ண்டுபிடிக்கும் ப‌ணி செய்ப‌வ‌ர்க‌ள், என‌வே குற்ற‌வாளி எங்கே போகிறான் என்ப‌தை காவ‌ல‌ர் அறிந்து இருக்க‌ வேண்டும். குற்றவாளியின் போக்கை க‌ற்ற‌வ‌ன் போலிசு என்ப‌தை, போக்கை க‌ற்றவ‌ன் போலிசு என்று சொன்னார்க‌ள். "வாக்கை க‌ற்ற‌வ‌ன் வாத்தியார், போக்கை க‌ற்ற‌வ‌ன் போலிசு" என்ப‌தே ச‌ரி. ம‌ற்றுமொரு த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மொழி "ஆயிர‌ம் பேரை கொன்ற‌வ‌ன் அரை வைத்திய‌ன்". ஒரு வைத்தியன் ஆயிர‌ம் பேரை கொன்றால், அவ‌ன் வைதிய‌னே அல்ல‌, கொலைகார‌ன்! முற்கால‌த்தில், இந்திய‌ ம‌ருத்துவ‌ம் மூலிகைக‌ளை அடிப்ப‌டையாக‌ கொண்ட‌து. ஒரு ம‌ருத்துவ‌ன் மூலிகைக‌ளின் ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள், அவை கிடைக்கும் இட‌ம், ஒரு மூலிகை குண‌ப்ப‌டுத்தும் நோய்க‌ள் ப‌ற்றி அறிந்து இருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். என‌வே ஆயிர‌ம் வேர்க‌ளையாவ‌து க‌ற்ற‌வ‌னே அரை வைத்திய‌ன், முழு வைத்திய‌ன் ஆக‌ மேலும் ப‌ல‌ வேர்க‌ளை க‌ற்க‌ வேண்டும் என்ப‌தே அத‌ன் பொருள். என‌வே, "ஆயிர‌ம் வேரை கொன்ற‌வ‌ன் அரை வைத்திய‌ன் என்ப‌தே ச‌ரி" ந‌ம் தாய் மொழியாம் த‌மிழ் மொழியில் அறிவார்ந்த‌ இடுகைக‌ளை அளித்து‌ கொண்டிருக்கும் ந‌ண‌ப‌ர் ப‌ழ‌மைபேசிக்கு ந‌ன்றியும், வாழ்த்துக்க‌ளும்.

No comments: